Wednesday, February 10, 2010

நேரம், நல்ல நேரம் !


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சிறப்பாக பணியாற்ற இது நல்ல நேரம். கூட்டணி பிரச்சனைகள் ஒன்றும் இல்லை, பெரிய மாநில தேர்தல்கள் இல்லை, பொருளாதாரம் சீரடைந்து வருகிறது. முக்கியமாக எதிர் கட்சிகள் சிதைந்து போய் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு சில அமைச்சர்களை தவிர , பலர் சிறப்பாக பணியாற்றாதது வேதனை தருகிறது.

குறிப்பாக உள்துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். அதே போல் நிதி துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறப்பாக செயல்படுகிறார். மற்ற பல முக்கிய அமைச்சர்கள் செயல்பாடு சிறப்பாக இல்லை .

வெளியுறவு , பாதுகாப்பு போன்ற பிற முக்கிய துறைகள் போதிய அளவு சிறப்பாக செயல்படவில்லை. இந்திய, சீன எல்லையில் எண்ணிடங்கா ஊடுவல், அருணாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் செல்வதற்கு எதிர்ப்பு, பிரதமரின் அலுவலக கணினிகளில் உள்ள தகவல்களை எடுக்கும் முயற்சி என்று சீனத்திற்கு இந்தியாவிற்கும் இடையே சிக்கல் நிறைந்த ஒரு சூழலில் வெளியுறவுதுறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணவிட்கு, இணை அமைச்சர் சசி தரூர் விவகாரங்களை சமாளிபதட்கே நேரம் சரியாக உள்ளது.

பாதுகாப்பு துறை நவீனமாக்கல் ஏட்டளவில் உள்ளது . இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு நிலை குறித்தும், சீனா இராணுவம் நவீனமயப்படுத்துவதும், அந்நாடு தனது இராணுவ பலத்தை பெருக்கிக்கொள்வதன் நோக்கம் குறித்தும் கவலை இன்றி ஆமை போல் செயல்படுகிறது. ரயில்வே , கட்டுமானம் , தரை-வான்-கடல் வழி போக்குவரத்து போன்றவற்றில் சிறப்பான கவனம் இல்லை.

ஒருங்கிணைப்பு , வேகம் மற்றும் ஆணையிடும் சக்தி, தலைமைக்கு குறைவாக உள்ளது. அதை வலுபடுத்த கட்சி தலைமை உதவ வேண்டும். இல்லை என்றால் இந்த பொண்ணான நேரத்தை இழக்க நேரிடும்.
(வலையின் ஓராண்டு நிறைவு சிறப்பு பதிவு .)