Saturday, May 23, 2009

ஒரு புரட்சியின் துவக்கம்.



காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்பு உள்ளது என்று தேர்தல் அறிவிக்கும் முன்னரே தெரிந்ததுதான். ஆனால் 206 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி மிகபெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று யாருக்கும் தெரியாது. மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் மட்டும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் காங்கிரஸ் 200+ தொகுதிகளை வெல்லும் என்று கூறியிருந்தார். தமிழகத்தை பொறுத்த மட்டில் பலவித எதிபார்புகளுக்கு மத்தியில் மீண்டும் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி வென்றது . இந்நிலையில் திரிநாமுள் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , தேசிய மாநாடு மற்றும் சில சிறிய கட்சிகள் , சுயேச்சை MP-கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது . நேற்று மாலை வண்ணமிகு விழாவில் மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பதவி ஏற்றார். இரண்டாவதாக பதவி ஏற்கும் ஐந்தாவது பிரதமர்.

இது கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற சம்ரதாய பதவி ஏற்பு விழா அல்ல. ஒரு புரட்சியின் துவக்கமாகவே நான் பார்க்கிறேன். இந்த முறை காங்கிரஸ் ஒரு தெளிவுடன் உள்ளது . கேட்டதை கூட்டணிகளுக்கு கொடுத்தும் , தவறுகளை பொருத்தும் போவதாக இல்லை. இது தி.மு.க.-வுடனான அமைச்சரவை பங்கீடில்லேயே தெளிவாக தெரிகிறது. தனது அமைச்சரவையில் யாரை சேர்க்க வேண்டும் எனபது பிரதமரின் தனித்த உரிமை. ஏனெனில் அப்பொழுதான் யாரை எங்கு அமர்த்தி, அந்த அமைச்சகத்தின் செயல்பாட்டுப் பலன் மக்களுக்கு முழுமையாக சென்றடைய ஒரு பிரதமரால் உறுதி செய்ய முடியும்.

நேர்மையான , தெளிவான திட்டத்துடன் கூடிய ஒரு அறிஞரை நாம் பிரதமராக பெற்றுள்ளோம். கட்சி தலைவலிகள் , கூட்டணி தலைவலிகள் அவருக்கு இல்லை . அந்த சுமைகளை சோனியா காந்தி , ராகுல் காந்தி பார்த்துகொள்வார்கள்.அமைச்சரவை குழுவில் நம்பிக்கைக்குரிய, திறமையான நபர்களை அமர்த்துவதுதான் பிரதமர் செய்ய வேண்டிய முதல்கட்ட பணி. பின்னர் ஒவ்வொரு துறையிலும் இலக்கு நிர்நியக்க பட்டு , அதை அடைவதற்கான திட்டம் மற்றும் உத்திகளை அந்தந்த அமைசர்களுடன் விவாதித்து முடிவெடுக்கப்படும். இவற்றுக்கெல்லாம் பிரதமருடன் பிரணாப் முகர்ஜி , சிதம்பரம் , கபில் சிபல் , கமல் நாத் ,A K அந்தோனி , சுஷில் குமார் சிண்டே போன்ற மூத்த அமைச்சர்களின் துணை முக்கியமானதாக கருதப்படுகின்றது.

கல்வி , சுகாதாரம்,கிராமப்புற வேலைவாய்ப்பு ,விவசாயம் , கட்டமைப்பு , பாதுகாப்பு, நகர்புற மேம்பாடு, மனிதவள மேம்பாடு, தொழில் துறை மற்றும் அண்டைய அயல் நாடுகளுடைய உறவு ஆகியவற்றில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமானது.அணைத்து துறைகளிலும் திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும். உழைக்க அமைச்சரவை குழு தயாராகி வருகிறது . நிச்சயம் இலக்கை அடைய பல்வேறு வழிமுறைகளை கையாள திட்டமிடப்பட்டுள்ளது. காலாண்டு அறிக்கை கலந்து ஆய்வு , சரியாக செயல்படாத அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தல் ஆகியன. இந்த ஆட்சி நிச்சயம் சிறப்பாக செயல்படுவது உறுதி செயப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் முக்கிய அதிகார மையமாக இந்தியாவை ஆக்குவதன் தொடர்ச்சிதான் இது. மாபெரும் அரசியல் புரட்சிக்கு தயராகிறது இந்தியா.

மன்மோகன் சிங்கின் இந்த அரசியல் புரட்சிக்கு முக்கிய மற்றும் மூத்த அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அதிகாரிகள் மற்றும் இளைஞர் துணை நிச்சயம் தேவை. புரட்சியை தொடர்ந்து நடத்தவும் , அடுத்த தேர்தலில் தனி பெரும்பான்மை பெறவும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் தலைமை காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானதும் முதல்மையானதுமாகும். அனைத்துதரப்பும் கடுமையாக உழைக்க தயாராக வேண்டும். விழுமின்; எழுமின்; உழைமின். வாழ்க இந்தியா ! வளர்க பாரதம் !

Thursday, April 23, 2009

தேர்தல் களம்2009(தமிழ் நாடு):பல முனை போட்டியும் கறுப்பு குதிரைகளும்




TOP 10-என்று சொல்லப்படும் பத்து கட்சிகள் அ.தி.மு.க, தி.மு.க,காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,தே.மு.தி.க,பா.ம.க, ம.தி.மு.க,பா.ஜ.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றில் அ.தி.மு.க அணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,பா.ம.க மற்றும் ம.தி.மு.க, தி.மு.க அணியில் காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தே.மு.தி.க தனியாகவும் பா.ஜ.க. சரத்குமாரின் ச.ம.க. மற்றும் சில சிறிய கட்சிகளுடனும் கூட்டணி வைத்துள்ளது.

தேர்தலுக்கு முந்தய பல்வேறு கருத்து கணிப்பில் அ.தி.மு.க அணி மற்றும் தி.மு.க அணி ஆகிய இரண்டு அணிகள் மட்டும் அணைத்து தொகுதிகளிலும் வெல்லும் என்றும் தே.மு.தி.க ஒரு குறிபிட்ட அளவு ஓட்டுகளை கைப்பற்றி எந்த தொகுதியையும் வெல்லாது என்றும் கூறியுள்ளன.இதில் கவனிக்க தக்கது என்னவென்றால் இரு பெரிய அணிகளை தவிர வேறு எந்த கட்சிகளும் வெல்லாது என்பதுதான். ஆனால் கள உண்மை நிலவரம் வேறுமாதிரி உள்ளது. அதாவது தே.மு.தி.க உள்ளிட்ட மற்ற முக்கிய கட்சிகளுக்கு சில தொகுதிகள் கிடைக்கும் வாய்பு உள்ளது என்று தோன்றுகிறது. பல முனை போட்டிகளாலும், முக்கிய அணியில் சரியான வேட்பாளர் தேர்வு செய்யாததாலும், குறிப்பிட்ட கட்சிகள் செல்வாக்குள்ள தொகுதிகளை கூட்டணிக்கு தாரைவார்த்ததாலும் இது சாத்தியம் ஆகும்.


மூன்று முனைகளுக்கும் அதிகமாக பல முனை போட்டி பல தொகுதிகளில் உள்ளது. ஆம். அ.தி.மு.க அணி, தி.மு.க அணி,தே.மு.தி.க மற்றும் சில தொகுதிகளில் பா.ஜ.க , புதிய ஜாதி கட்சிகள், சிறிய கட்சிகள் செல்வாக்குள்ள சில தொகுதிகள் ஆகியவற்றால் பல முனை போட்டி நிலவுகிறது. இவர்கள் வெற்றி பெறாவிட்டாலும் வெற்றி வாய்பை பெரிய அணியிடமிருந்து பறித்து வேறு கட்சிக்கு வழங்க மறைமுகமாக உதவலாம்.

சரியான வேட்பாளர் தேர்வு செய்யாததும் வெற்றி வாய்பை பாதிக்கும். உதாரணதிட்கு எங்கள் நீலகிரி தொகுதியை சொல்லலாம். இத்தொகுதி காங்கிரஸின் கோட்டை(தொகுதியின் வரலாறை பார்க்க) . இது தி.மு.க விற்கு கொடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் ராஜா. ஆம். ஐந்து ஆண்டு ஐ.மு.கூ. அரசில் பெரிய உழல் குற்றசாட்டுக்கு ஆளான அதே ராஜாதான். உழல் ராஜா. என்ன செய்வது? இது மாநில கட்சிகளின் காலம். பொறுத்து கொள்கிறது காங்கிரஸ். ஆனால் மக்கள் பொறுப்பார்களா? சரி ராஜாவை தோட்கடிக்க எதிர் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று மக்கள் எண்ணும் போது அ.தி.மு.க அணியில் ம.தி.மு.க. விற்கு ஒதுக்கபட்டுள்ளது. தொடர்ந்த இந்திய ஒருமைபாடிட்கு எதிராக பேசிவரும் வைகோ விற்கு வாக்களிக்க மாட்டார்கள். அடுத்து இருப்பது தே.மு.தி.க மற்றும் பா.ஜ.க. பா.ஜ.க இங்கு இருமுறை வெற்றி பெற்றுள்ளது.பா.ஜ.க உதகையை சேர்ந்த வேட்பாளர் அறிவித்துள்ளது. மற்ற கட்சிகள் அனைத்தும் கோவையை சேர்ந்த மற்றும் வேறு மாவட்ட வேட்பாளர்கள்.எனவே இங்கு வேறு கட்சிகளின் வெற்றி வாய்பு மறுபதற்கில்லை. இதே போல் முக்கிய அணியில் சரியான வேட்பாளர் தேர்வு செய்யாததாலும் மற்றும் குறிப்பிட்ட கட்சிகள் செல்வாக்குள்ள தொகுதிகளை கூட்டணிக்கு தாரைவார்த்ததாலும் வேறு கட்சிகளுக்கு வெற்றி வாய்பு உள்ளது.

மேலும் புதிய ஜாதி கட்சிகளும் பெரிய அணிகளின் வெற்றி வாய்பை பாதிக்கும். இதுபோன்று பல முனை போட்டிகளால் யார் வெல்வார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. வெற்றி வாய்புள்ள வெள்ளை குதிரைகளுக்கு மத்தியில் ஓடும் அந்த கண்ணனுக்கு( ஊடகங்கலுகு) தெரியாத கறுப்பு குதிரைகள் எதுவென்று மே 16 அன்று தெரியும்.

Friday, April 3, 2009

தமிழக அதிசயம்: மீனாட்சி அம்மன் கோவில்

தமிழகத்தில் சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஹிந்து அறநிலை துறை அமைச்சகம் மற்றும் கோவில் திருப்பணி சட்ட திருத்தம் ஆகியன நடப்பு ஆட்சியிலும் கடைபிடிக்கப்பட்டு வருவது வரவேற்க தக்க ஒன்று . அதன் அடிப்படையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல கோடி செலவில் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருவது (ஏப்ரல் 8) நாம் அறிவோம் . இதோ, கோவிலை பற்றி சில விடயங்கள்....

சுந்தரேஸ்வரரை மணக்கும் மீனாட்சி அம்மன். உடன் திருமால்.




தமிழகத்தில் மிகவும் பழமையான நகரம் மதுரை. மதுரையில் நடுநாயகமாய் இருப்பது மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோவில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்றில் சொல்லப்படுகிறது. ஐம்பெரும் காப்பியங்களுள் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவற்றில் மதுரையை பற்றி எழுதப்பட்டுள்ளது. எழாம் நூற்றாண்டில் திருஞானசம்ந்தர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி பாடியுள்ளார்.




254X237 மீட்டர் என்ற அளவில் 45 ஏக்கர் பரப்பில் மிகவும் பரந்து காணப்டுகிறது. நான்கு ராஜ கோபுரங்கள் உட்பட 12 கோபுரங்கள் கம்பீரமாக உள்ளன. ஆயிரம் கால் மண்டபம் ( 985 கால் மட்டுமே) கோவிலுக்கு அழகை சேர்க்கிறது. பொற்றாமரை குளம், கோவிலுக்கு மற்றுமோர் அடையாளம். நான்கு ராஜ கோபுரங்கலில் தெற்கு கோபுரம் உயரமானது . உயரம் சுமார் 170 அடி.

ஆயிரம் கால் மண்டபம்



பொற்றாமரை குளம் .




14 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூர் என்ற முகலாய தளபதியால் மீனாட்சி அம்மன் கோவிலின் பழமை வாய்த்த வரலாற்று சின்னங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. எனினும் பின்னர் ஆட்சி செய்த விஜய நகர பேரரசால் புனரமைக்கப்பட்டது. பல வரலாற்று நிகழ்வுகளை கடந்து இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தமிழக அதிசயம் என்றால் அது மிகையாகாது.

Tuesday, March 17, 2009

ஓட்டுகள் விலைக்கு ! நாடும் விலைக்கு !

நடைபெறவுள்ள பொது தேர்தலில் ஓட்டுகளை பெற பல இலவச திட்டங்களை பல்வேறு மாநில அரசுகளும், தேசிய கட்சிகளும் அறிவித்துள்ளன. இலவச தொலைகாட்சி பெட்டி,மாத மாதம் ரூபாய் 2000/- ஏழைகளுக்கு(தெலுங்கு தேச கட்சி), இலவச வீட்டு மனை (குஜராத் காங்கிரஸ்), ரூபாய் இரண்டுக்கு கோதுமை(ராஜஸ்தான் காங்கிரஸ்), ரூபாய் 10000/- ல் கணினி மற்றும் இலவச செல் போன்(பா.ஜ.க.) மேலும் பல்வேறு வரி சலுகைகள், சம்பள உயர்வுகள் அறிவிக்கபட்டுள்ளன.இது போன்ற இலவச திட்டங்களை தமிழ் நாட்டிலும் எதிபார்க்கலாம்!தமிழ் நாட்டில் தி.மு.க 2006 அறிவித்த இலவச திட்டங்கள் பெருமளவு வெற்றிக்கு வழிசெய்தது. இதுவே பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ள இலவச திட்டங்களுக்கு முன்னோடி.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஐந்தாண்டுத் திட்டங்களும், பிற செயல் திட்டங்களும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்கான வருவாய் மற்றும் செலவினங்களைக் கணக்கிட்டு மத்திய, மாநில பட்ஜெட்டுக்களும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி சலுகைத் திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் செலவழித்து, பணத்தை வீண் விரயம் செய்கிறது. மத்திய அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு,மாநில அரசுகள் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியிலிருந்து பெருமளவை இலவச திட்டங்களுக்கு எடுத்து, திட்டங்களின் நோக்கத்தையே சிதறடித்து விடுகின்றன. அரசியல் ஆதாயங்களுக்காக இத்தவறை நன்கு அறிந்திருந்தும் மத்திய அரசு, மாநில அரசுகளை எதுவும் கேட்பதில்லை. கண்டும், காணாமல் இருந்து விடுகிறது. இதனால், மக்களின் வாழ்க்கைத் தரமும், வாங்கும் சக்தியும் உயர்வதற்குப் பதிலாக மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு எப்போதும் அரசின் இலவசங்கள் மற்றும் சலுகைகளுக்காக கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சமுதாய நலத் திட்டங்களை அரசியல்வாதிகள் செயல்படுத்துவதன் மூலம் பல கோடிகள் அவர்கள் பாக்கெட்டுக்களுக்குச் செல்கின்றன என்பதை சாதாரணப் பாமரனும் நன்கறிவான். வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தில் 25 சதவீதம் தான் திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகிறதே தவிர மீதிப்பணம் பல முதலைகளுக்குக் கை மாறுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறு திருடும் பணத்தின் ஒரு பகுதி தேர்தலில் செலவு செய்கிறார்கள்.

தமிழ் நாட்டில் நடைபெற்று முடிந்த திருமங்கலம் இடைதேர்தலில் பெருமளவு பணம் விளையாடியது நாடறியும். ஒரு குறிபிட்ட கட்சிகாரர் மட்டும் தன் அப்பா தயவால் சுமார் 100 கோடி செலவு செய்தாராம். இதற்கு பதிலாக அந்த தொகுதியில் உள்ள 100 கிராமங்களுக்கு ரூபாய் ஒரு கோடி வீதம் நல திட்ட பணி செய்தும் வெற்றி பெறலாம் என்பதை ஏனோ சிந்திப்பதில்லை. விருந்துகள், மது மற்றும் பணம், பரிசு கொடுத்தல்ஆகிய வழிகளில் பணம் விரயம் செய்யப்படுகிறது.இந்த பணம் எல்லாம் யாருடையது? ஏது இவ்வளவு பணம்?

அனைத்து இயற்கை வளங்களையும் பெற்றுள்ள இந்தியத் திருநாட்டில் வாழும் இந்தியர்களாகிய நாம் பிழைப்புக்காக மற்ற நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பரிதாப நிலை மாற இந்த இலவச திட்டங்களை எதிர்போம் . ஆக்க பூர்வமான தேர்தல் அறிக்கை கொண்ட கட்சிக்கு வாக்களிப்போம்.

Monday, March 16, 2009

மராட்டிய பிரதமர் ! தலித் பிரதமர் !

மராட்டிய பிரதமர் ! தலித் பிரதமர் ! இது போன்ற கோசங்கள் எழுத்துள்ளது அனைவரும் அறிவர். மராட்டிய பிரதமர் என்ற கோசம் ஒரு மோசமான முன்னுதாரணம்.இதை முன்மொழிந்தவர் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சரத் பாவார். வழிமொழிந்தவர் பா.ஜ.க.வில் உள்ள சிவசேனா தலைவர் பால் தாக்ரே .

தலித் பிரதமர் என்ற கோசம் நாயாமானதுதான். இதை முன்வைப்பவர் பகுஜன் கட்சி தலைவி மாயாவதி. மேலும் இது அவருக்கு பல தலித் வாக்குகளை இப்போதும், எதிர்காலத்திலும் பெறவைக்கும்.இது கண்டுகொள்ளபட வேண்டிய பிரச்சனை. 2004- லில் யாரும் எதிர்பாராத நிலையில் (நான் மட்டும் எதிர்பார்த்தேன். அது வேறு கதை) ஒரு சிறும்பான்மை சமுதாயத்தை சேர்ந்த மன்மோகன் சிங்கை பிரதமராகினார் சோனியா காந்தி . அதே போல் காங்கிரஸ் வெற்றிபெறும் நிலையில் இந்த பிரச்சனைக்கும் தீர்வு காண்பார் என்று எனக்கு தோன்றுகிறது.

நான் முன் பதிவில் பிரணாப் முகர்ஜியை(இவர் தலித் இல்லை) முன்னிலைபடுத்தியிருந்தேன். இவர் நான் விரும்பும் பிரதமர் வேட்பாளர். ஒரு தலித்தையும் பிரதமராக்கலாம். சோனியாவால் முடியும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற ரீதியில் ஒரு மராட்டிய தலித்தை பிரதமராக்கலாம். முன்னாள் மராட்டிய(மகாராஷ்டிரா) முதல்வரும் தற்போதைய மத்திய மின்துறை அமைச்சருமான சுசில் குமார் சிண்டே ஒரு தலித் ஆவார். இவருக்கு வாய்புக்கள் அதிகம்.






எனினும் பிரதமர் பொறுப்புக்கு தகுதியும் திறமையும் அளவு கடந்து தேவை . முதலில் காங்கிரஸ் கூட்டணி வெல்லட்டும். பிறகு என்ன நடைபெறுகிறது என்று பார்போம். காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்ற அதீத நம்பிக்கையில் இந்த பதிவை இட்டுல்லேன்.

Friday, March 6, 2009

நான் விரும்பும் பிரதமர் வேட்பாளர்!

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்சின் வெற்றி வாய்பு நன்றாக இருக்கும் பட்சத்தில், காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. சிலர் ராகுல் காந்தியை முன்னிறுத்துகின்றனர். சோனியா காந்தி மற்றும் ராகுல் , மன்மோகன் சிங்கே தொடர்ந்து நீடிப்பார் என்று கூறுகின்றனர். இந்த விடயத்தில் நான் சற்று வேறு விதமாக, அதாவது பிரணாப் முகர்ஜியை பிரதமராக்கலாம் என்று கருதுகிறேன்.



73 வயது ஆகும் பிரணாப் முகர்ஜி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்.14
வது லோக் சபாவில் பாதுகாப்பு , வெளியுறவு துறை மற்றும் தட்காலிக பிரதமர் மற்றும் நிதி துறையை(பிரதமர் மன்மோகன் சிங் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட போது) கவனித்தவர். 14-வது லோக் சபாவில் no-2 என்று சொல்ல வேண்டும் என்றால் இவரை தவிர வேறு யாரும் இல்லை .பல முக்கிய முடிவுகள், விவாதங்கள் மற்றும் பிரச்னைகளில் இவரின் பங்கு அளப்பரியது.

எதிர் கட்சிகளே பாராட்டக்கூடிய அளவு மிக திறமையானவர் மற்றும் நம்பிக்கையானவர். 14-வது லோக் சபாவின் கடைசி கூட்ட தொடரின் கடைசி இரு நாள் முன்பு பேசிய எதிர் கட்சி தலைவர் மற்றும் பா.ஜ.க. வின் பிரதம வேட்பாளர் L.K.அத்வானி வெகுவாக பாராட்டினார்."சில பிரச்சனைகளை சமாளிப்பதில், பிரணாப் முகர்ஜி இல்லை என்றால் இந்த அரசு என்ன ஆகி இருக்கும் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு அவர் திறமையானவர்" என்றார். அவர் மேலும் கூறுகையில் "நான் , பிரணாப் முகர்ஜி மற்றும் சபாநாயகர் சோம்நாத் சட்ர்ஜி ஆகியோர் சுமார் 40 ஆண்டுகளாக சபை உறுபினர்களாக உள்ளோம்" என்றார். காங்கிரஸின் மிக மூத்த அனுபவசாலி பிரணாப் முகர்ஜி ஆவார்.

ஜார்ஜ் புஷ்சுடன் விவாதிக்கும் போது..........




சர்வதேச அணுசத்தி முகமை (IAEA) வின் இந்தியாவுக்கான சிறப்பு தள்ளுபடி,அணு எரிபொருள் நாடுகளுடனான ஒப்பந்தம், அமெரிக்க அணு ஒப்பந்தம், 26/11 தாக்குதல்லையடுத்து பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்தது பாகிஸ்தானை பணிய வைத்தது
மற்றும் பல முக்கிய பிரச்சனைகளில் அவரின் பங்களிப்பு முதன்மையானதும் முக்கியமானதுமாகும்.

அமெரிகாவின் வெளியுறவு தலைமை செயலாளர் கண்டலிசா ரைசுடன் அணு ஒப்பந்தம்.



போதுமான கல்வி ,ராஜ தந்திரம் மற்றும் மக்களை புரிந்து செயல்படும் மனோ தத்துவம் ஆகிய குணங்கள் நாடாளுபவர்க்கு தேவை. இவை அணைத்தும் ஒருங்கே அமைந்த அனுபவம்மிக்க பிரணாப் முகர்ஜி பிரதமரானால் நாடு தன் வளர்ச்சி பாதையில் அடுத்த அடி எடுத்து வைக்கும் என்பதில் ஐயம் இல்லை .

Tuesday, March 3, 2009

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி யாருக்கு?

நேற்று தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.இப்போது உள்ள நிலையில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது என்றே சொல்லலாம். ஏனேன்றால் காங்கிரஸ் அரசுக்கு பெரிய எதிர்பலை இல்லை.சில மாநிலங்களை இழந்தாலும் பல மாநிலங்களில் வலிமை பெற்று உள்ளது. வலிமையானது தேர்தல் வெற்றி (ராஜஸ்தான்,டெல்லி & ஜம்மு & காஸ்மீர் ) மூலமும் ,கூட்டணி ( உத்தர பிரதேசம் :சமாஜ்வாடி ,மேற்கு வங்கம்:திரிணமுல் ,ஜம்மு & காஸ்மீர் :தேசிய மாநாடு ) மூலமும் பெற்றுள்ளது.

பா.ஜ.க., குஜராத் , மத்திய பிரதேசம்,சத்திஸ்கர் ஆகியவற்றில் வெற்றியை தக்கவைத்துள்ளது.கர்நாடகவில் சட்ட சபை தேர்தல் வெற்றிக்கு சமமாக ராஜஸ்தானில் சட்ட சபை தேர்தலில் தோல்வி.முந்தய ஆட்சியில் பா.ஜ.க., விற்கு வலுவாக இருந்த தெலுங்கு தேசம்,தி.மு.க., திரிணமுல் இப்போது அவர்கள் பக்கம் திரும்ப வாய்பு இல்லை. இருக்கும் சிவசேனா மதில்மேல் பூனை போல் உள்ளது. பவார் உடன் கூட்டணி அமைக்க தாக்கரே திட்டம் தீட்டி உள்ளது தெரியவந்துள்ளது.ஹரியானா ,உத்தர கண்ட போன்ற சிறிய மாநிலங்கள் வெற்றி (இரண்டும் சேர்ந்து மொத்தம் ஒன்பது (4+5) தொகுதிகள்) பெரிய மாற்றத்தை தராது. ஆக பா.ஜ.க வின் வளர்ச்சி தேங்கி உள்ளது.மேலும் கூட்டணி விசயத்தில் பின்தங்கி உள்ளது.ஆந்தர, தமிழ் நாடு ,கேரளா ஆகியவற்றில் 0-5 சீட்டுக்கள் மட்டுமே வெல்ல வாய்புள்ளது.மாறாக காங்கிரஸ் நல்ல நிலைமையில் உள்ளது.

மூன்றாவது அணி என்ற கோசத்தை , இடது சாரிகள் முன்வைகின்றன.இந்த முறை இடது சாரிகள்,நந்திகிராம் வன்முறையால் மண்ணை கவ்வும் என்றே தோன்றுகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் நடந்து முடிந்த சட்ட சபை இடை தேர்தலில் மார்க்சிஸ்ட் தனது சொந்த தொகுதியை 55 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் திரிணமுளிடம் தோற்றது(மார்க்சிஸ்ட் 30ஆயிரம்+,திரிணமுல் 80ஆயிரம்+). திரிணமுல்லுக்கு, காங்கிரஸ் ஆதரவு தராமல் இருந்தாலும், மார்க்சிஸ்ட் வெற்றி பெற வாய்ப்பில்லை. சென்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட், 30+ சீட்டுகள் வென்றன . இந்த முறை 10 சீட்டுகள் பெறுவதே கடினம்.அதே போல் கேரளாவில் 19 சீட்டுகள் (மொத்தம் 20) வென்றன. ஆனால் இந்தமுறை கடினம்.ஆக இடது சாரிகள் இந்த முறை மண்ணை கவ்வுவது உறுதி.

மற்ற மூன்றாவது அணி தோழர்கள் தேவ கவுடா ,சந்திர பாபு நாய்டு போன்ற வர்கள் அவர்கள் மாநிலத்தில் மும்முனை போட்டியில் உள்ளன. ஆக பெரிய ஆறு மாநிலத்தில் ( உத்தர பிரதேசம்(80), பிகார்(48+?), மேற்கு வங்கம்(42), மராட்டியம்(48) ,ஆந்த்ரா(42) மற்றும் தமிழ் நாடு(39+1)) காங்கிரஸ் வலுவாக உள்ளது.மாறாக பா.ஜ.க வளராமல் காய்ந்து போய் உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தல் வெற்றி காங்கிரஸ்சுக்கு பிரகாசம்!

Saturday, February 28, 2009

நாடாளுமன்ற தேர்தல் களம்2009: தமிழ் நாடு

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் யாருடன் யார் கூட்டு என்று தெரியாமல் மண்டைய் -ஐ பிய்த்து கொள்ளலாம் போல் உள்ளது. இப்போது உள்ள நிலையில் தி.மு.க. வில் காங்கிரஸ் உறுதி. தே.மு.தி.க.- விட்கு தி.மு.க வலை வீசுகிறது. ஆனால் தே.மு.தி.க. காங்கிரஸ் அல்லது இடது சாரி களுடன்னான கூட்டணியை மட்டுமே விரும்புகிறது.

அண்ணா தி.மு.க. வில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது . கூட்டணிஇல் இடது சாரிகள் உள்ள நிலையில் காங்கிரசுக்கு நட்புகரம் நீட்டுகிறது. காங்கிரஸ் வராத நிலையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பா.ஜ.க வுடன் செல்லாது என்று சொல்லமுடியாது. ம.தி.மு.க ,அண்ணா தி.மு.க. வில் நீடிக்கும் என்று நம்பலாம்.

பா.ம.க வின் நிலை பரிதாபமாக உள்ளது. யாரும் கண்டுகொள்ளவே இல்லை.விடுதலை சிறுத்தைகள் தி.மு.க விற்கு செல்ல காங்கிரஸ் தடையாக இருக்கும். யாரும் கூட்டணிக்கு வராத நிலையில், பா.ஜ.க தேர்தலை தனியாக சந்திக்கும்.

TOP 10-என்று சொல்லப்படும் பத்து கட்சிகள் (அண்ணாதி.மு.க, தி.மு.க,காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,தே.மு.தி.க,பா.ம.க,மா.தி.மு.க,பா.ஜ.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் ) முக்கிய பங்கு வகிக்கும்.மற்ற கட்சிகள் (ச.ம.க,பகுஜன்,.....) என்ன செய்யும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு அதிக எண்ணிகையில் (பத்து) வெற்றியை நிர்ணியக்கும் கட்சிகள் இல்லை.

ஒன்று தெளிவாக தெறிகிறது. கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் சீட்டு கிடைக்காது.பெரிய கூட்டணியின் வெற்றி பிரகாசமாய் இருக்கும் . இதுவே நாம் முந்தய தேர்தலில் பார்த்தது.மற்ற மாநிலங்கலோடு ஒப்பிடுகையில் தமிழ் நாட்டின் அரசியல் கூட்டணி நிலை குழப்பமான , மண்டைய் -ஐ பிய்த்து கொள்லும் நிலை தான் உள்ளது.

Tuesday, February 10, 2009

தென்னாடுடய சிவனே போற்றி!




வணக்கம். இது என்னுடைய முதல் பதிவு.நான் பெரிதும் எழுத விரும்புவது அரசியல் மட்டுமே. அவ்போது இதர சில விசயங்களை பற்றி விவாதிக்க உள்ளேன்.என்னுடைய இந்த முயற்சிக்கு நீங்களும், அந்த சிவனும் துணை நிற்க வேண்டுகிறேன்.