Saturday, May 23, 2009

ஒரு புரட்சியின் துவக்கம்.



காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்பு உள்ளது என்று தேர்தல் அறிவிக்கும் முன்னரே தெரிந்ததுதான். ஆனால் 206 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி மிகபெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று யாருக்கும் தெரியாது. மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் மட்டும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் காங்கிரஸ் 200+ தொகுதிகளை வெல்லும் என்று கூறியிருந்தார். தமிழகத்தை பொறுத்த மட்டில் பலவித எதிபார்புகளுக்கு மத்தியில் மீண்டும் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி வென்றது . இந்நிலையில் திரிநாமுள் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , தேசிய மாநாடு மற்றும் சில சிறிய கட்சிகள் , சுயேச்சை MP-கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது . நேற்று மாலை வண்ணமிகு விழாவில் மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பதவி ஏற்றார். இரண்டாவதாக பதவி ஏற்கும் ஐந்தாவது பிரதமர்.

இது கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற சம்ரதாய பதவி ஏற்பு விழா அல்ல. ஒரு புரட்சியின் துவக்கமாகவே நான் பார்க்கிறேன். இந்த முறை காங்கிரஸ் ஒரு தெளிவுடன் உள்ளது . கேட்டதை கூட்டணிகளுக்கு கொடுத்தும் , தவறுகளை பொருத்தும் போவதாக இல்லை. இது தி.மு.க.-வுடனான அமைச்சரவை பங்கீடில்லேயே தெளிவாக தெரிகிறது. தனது அமைச்சரவையில் யாரை சேர்க்க வேண்டும் எனபது பிரதமரின் தனித்த உரிமை. ஏனெனில் அப்பொழுதான் யாரை எங்கு அமர்த்தி, அந்த அமைச்சகத்தின் செயல்பாட்டுப் பலன் மக்களுக்கு முழுமையாக சென்றடைய ஒரு பிரதமரால் உறுதி செய்ய முடியும்.

நேர்மையான , தெளிவான திட்டத்துடன் கூடிய ஒரு அறிஞரை நாம் பிரதமராக பெற்றுள்ளோம். கட்சி தலைவலிகள் , கூட்டணி தலைவலிகள் அவருக்கு இல்லை . அந்த சுமைகளை சோனியா காந்தி , ராகுல் காந்தி பார்த்துகொள்வார்கள்.அமைச்சரவை குழுவில் நம்பிக்கைக்குரிய, திறமையான நபர்களை அமர்த்துவதுதான் பிரதமர் செய்ய வேண்டிய முதல்கட்ட பணி. பின்னர் ஒவ்வொரு துறையிலும் இலக்கு நிர்நியக்க பட்டு , அதை அடைவதற்கான திட்டம் மற்றும் உத்திகளை அந்தந்த அமைசர்களுடன் விவாதித்து முடிவெடுக்கப்படும். இவற்றுக்கெல்லாம் பிரதமருடன் பிரணாப் முகர்ஜி , சிதம்பரம் , கபில் சிபல் , கமல் நாத் ,A K அந்தோனி , சுஷில் குமார் சிண்டே போன்ற மூத்த அமைச்சர்களின் துணை முக்கியமானதாக கருதப்படுகின்றது.

கல்வி , சுகாதாரம்,கிராமப்புற வேலைவாய்ப்பு ,விவசாயம் , கட்டமைப்பு , பாதுகாப்பு, நகர்புற மேம்பாடு, மனிதவள மேம்பாடு, தொழில் துறை மற்றும் அண்டைய அயல் நாடுகளுடைய உறவு ஆகியவற்றில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமானது.அணைத்து துறைகளிலும் திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும். உழைக்க அமைச்சரவை குழு தயாராகி வருகிறது . நிச்சயம் இலக்கை அடைய பல்வேறு வழிமுறைகளை கையாள திட்டமிடப்பட்டுள்ளது. காலாண்டு அறிக்கை கலந்து ஆய்வு , சரியாக செயல்படாத அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தல் ஆகியன. இந்த ஆட்சி நிச்சயம் சிறப்பாக செயல்படுவது உறுதி செயப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் முக்கிய அதிகார மையமாக இந்தியாவை ஆக்குவதன் தொடர்ச்சிதான் இது. மாபெரும் அரசியல் புரட்சிக்கு தயராகிறது இந்தியா.

மன்மோகன் சிங்கின் இந்த அரசியல் புரட்சிக்கு முக்கிய மற்றும் மூத்த அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அதிகாரிகள் மற்றும் இளைஞர் துணை நிச்சயம் தேவை. புரட்சியை தொடர்ந்து நடத்தவும் , அடுத்த தேர்தலில் தனி பெரும்பான்மை பெறவும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் தலைமை காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானதும் முதல்மையானதுமாகும். அனைத்துதரப்பும் கடுமையாக உழைக்க தயாராக வேண்டும். விழுமின்; எழுமின்; உழைமின். வாழ்க இந்தியா ! வளர்க பாரதம் !

2 comments:

Sanjai Gandhi said...

ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை?

citizen said...

எழதுகிறேன் சஞ்சய் அவர்களே! நேரம் இன்மை ,இடமாற்றம் மற்றும் பல்கலைகழகதில் மேலாண்மை கல்விக்கு சேர்த்துள்ள காரணமாக எழுத முடியவில்லை.இயலாமைக்கு வருந்துகிறேன்.