தமிழக சட்டமன்ற தேர்தல் 2011, பல புதிய அனுபவங்களை விட்டு செல்ல காத்திருகிறது. கடுமையான தேர்தல் நடைமுறை, பல கட்சிகளின் உண்மையான பலம், மக்கள் எதிர்பார்ப்பு மற்றும் கூட்டணி ஆட்சி ஆகியன . பல தேர்தல்களை சந்தித்திருந்தாலும், தேர்தல் 2011 சற்று வித்தியாசமாக இருக்குமென்றே தோன்றுகிறது.
கடுமையான தேர்தல் நடைமுறை, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தொடர்கிறது. இது வாக்கு எண்ணிக்கை நாள் வரை தொடரும் என்று எதிர் பார்க்கபடுகிறது. பண பலத்தை கட்டுக்குள் கொண்டுவந்தாலே மிகப்பெரிய வெற்றி.
அடுத்து மிகப்பெரிய கூட்டணி என்பதற்கு பதிலாக, பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க தலைமையில் அமையஉள்ள கூட்டணி சம பலமுள்ளதாக உள்ளது. இது கட்சிகளின் உண்மையான பலம் அறிய உதவும். மேலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க , இரண்டும் கூட்டணி கட்சிகளுடன் மிகவும் பணிந்து செல்கிறது. இது எப்போதும் இல்லாத ஒன்று. தனிபெரும்பான்மை தி.மு.க.-விற்கு வாய்ப்பில்லை. அ.தி.மு.க.-விற்கு சற்று உள்ளது. இது நடக்காத பட்சத்தில் கூட்டணி ஆட்சிதான்.
தேர்தல் முடிவு மக்கள் எதிர்பார்ப்பு என்ன என்பது தெளிவாக்கிவிடும். இலவசமா, ஊழல் எதிர்பா போன்றவை. மொத்தத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் 2011 முடிவு, தமிழகத்தை ஒரு புதிய பாதைக்கு இட்டு செல்லும் என்பதில் ஐயமேதுமில்லை.

No comments:
Post a Comment