நேற்று தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.இப்போது உள்ள நிலையில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது என்றே சொல்லலாம். ஏனேன்றால் காங்கிரஸ் அரசுக்கு பெரிய எதிர்பலை இல்லை.சில மாநிலங்களை இழந்தாலும் பல மாநிலங்களில் வலிமை பெற்று உள்ளது. வலிமையானது தேர்தல் வெற்றி (ராஜஸ்தான்,டெல்லி & ஜம்மு & காஸ்மீர் ) மூலமும் ,கூட்டணி ( உத்தர பிரதேசம் :சமாஜ்வாடி ,மேற்கு வங்கம்:திரிணமுல் ,ஜம்மு & காஸ்மீர் :தேசிய மாநாடு ) மூலமும் பெற்றுள்ளது.
பா.ஜ.க., குஜராத் , மத்திய பிரதேசம்,சத்திஸ்கர் ஆகியவற்றில் வெற்றியை தக்கவைத்துள்ளது.கர்நாடகவில் சட்ட சபை தேர்தல் வெற்றிக்கு சமமாக ராஜஸ்தானில் சட்ட சபை தேர்தலில் தோல்வி.முந்தய ஆட்சியில் பா.ஜ.க., விற்கு வலுவாக இருந்த தெலுங்கு தேசம்,தி.மு.க., திரிணமுல் இப்போது அவர்கள் பக்கம் திரும்ப வாய்பு இல்லை. இருக்கும் சிவசேனா மதில்மேல் பூனை போல் உள்ளது. பவார் உடன் கூட்டணி அமைக்க தாக்கரே திட்டம் தீட்டி உள்ளது தெரியவந்துள்ளது.ஹரியானா ,உத்தர கண்ட போன்ற சிறிய மாநிலங்கள் வெற்றி (இரண்டும் சேர்ந்து மொத்தம் ஒன்பது (4+5) தொகுதிகள்) பெரிய மாற்றத்தை தராது. ஆக பா.ஜ.க வின் வளர்ச்சி தேங்கி உள்ளது.மேலும் கூட்டணி விசயத்தில் பின்தங்கி உள்ளது.ஆந்தர, தமிழ் நாடு ,கேரளா ஆகியவற்றில் 0-5 சீட்டுக்கள் மட்டுமே வெல்ல வாய்புள்ளது.மாறாக காங்கிரஸ் நல்ல நிலைமையில் உள்ளது.
மூன்றாவது அணி என்ற கோசத்தை , இடது சாரிகள் முன்வைகின்றன.இந்த முறை இடது சாரிகள்,நந்திகிராம் வன்முறையால் மண்ணை கவ்வும் என்றே தோன்றுகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் நடந்து முடிந்த சட்ட சபை இடை தேர்தலில் மார்க்சிஸ்ட் தனது சொந்த தொகுதியை 55 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் திரிணமுளிடம் தோற்றது(மார்க்சிஸ்ட் 30ஆயிரம்+,திரிணமுல் 80ஆயிரம்+). திரிணமுல்லுக்கு, காங்கிரஸ் ஆதரவு தராமல் இருந்தாலும், மார்க்சிஸ்ட் வெற்றி பெற வாய்ப்பில்லை. சென்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட், 30+ சீட்டுகள் வென்றன . இந்த முறை 10 சீட்டுகள் பெறுவதே கடினம்.அதே போல் கேரளாவில் 19 சீட்டுகள் (மொத்தம் 20) வென்றன. ஆனால் இந்தமுறை கடினம்.ஆக இடது சாரிகள் இந்த முறை மண்ணை கவ்வுவது உறுதி.
மற்ற மூன்றாவது அணி தோழர்கள் தேவ கவுடா ,சந்திர பாபு நாய்டு போன்ற வர்கள் அவர்கள் மாநிலத்தில் மும்முனை போட்டியில் உள்ளன. ஆக பெரிய ஆறு மாநிலத்தில் ( உத்தர பிரதேசம்(80), பிகார்(48+?), மேற்கு வங்கம்(42), மராட்டியம்(48) ,ஆந்த்ரா(42) மற்றும் தமிழ் நாடு(39+1)) காங்கிரஸ் வலுவாக உள்ளது.மாறாக பா.ஜ.க வளராமல் காய்ந்து போய் உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தல் வெற்றி காங்கிரஸ்சுக்கு பிரகாசம்!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உண்மை தான் நண்பரே. காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும். மெற்கு வங்கத்தில் மம்தா கட்சியுடன் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. நந்திகிராம் போன்ற பிரச்சனைகளால் தள்ளாடும் மார்க்ஸிஸ்ட் மண்ணை கவ்வப் போவது நிஜம். 3வது அணி வெறும் மாயை. தலைவர் இளங்கோவன் சொன்னது போல் அது ஒரு உருப்படாத அணி. ஆளாளுக்கு பிரதமர் கனவில் மிதக்கிறார்கள்.
-/சஞ்சய்காந்தி
பின்னூட்டம் இட்ட சஞ்சய்காந்திக்கு நன்றி .அது ஒரு உருப்படாத அணி என்பது உண்மையான வார்த்தை.
Post a Comment