
73 வயது ஆகும் பிரணாப் முகர்ஜி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்.14
வது லோக் சபாவில் பாதுகாப்பு , வெளியுறவு துறை மற்றும் தட்காலிக பிரதமர் மற்றும் நிதி துறையை(பிரதமர் மன்மோகன் சிங் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட போது) கவனித்தவர். 14-வது லோக் சபாவில் no-2 என்று சொல்ல வேண்டும் என்றால் இவரை தவிர வேறு யாரும் இல்லை .பல முக்கிய முடிவுகள், விவாதங்கள் மற்றும் பிரச்னைகளில் இவரின் பங்கு அளப்பரியது.
எதிர் கட்சிகளே பாராட்டக்கூடிய அளவு மிக திறமையானவர் மற்றும் நம்பிக்கையானவர். 14-வது லோக் சபாவின் கடைசி கூட்ட தொடரின் கடைசி இரு நாள் முன்பு பேசிய எதிர் கட்சி தலைவர் மற்றும் பா.ஜ.க. வின் பிரதம வேட்பாளர் L.K.அத்வானி வெகுவாக பாராட்டினார்."சில பிரச்சனைகளை சமாளிப்பதில், பிரணாப் முகர்ஜி இல்லை என்றால் இந்த அரசு என்ன ஆகி இருக்கும் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு அவர் திறமையானவர்" என்றார். அவர் மேலும் கூறுகையில் "நான் , பிரணாப் முகர்ஜி மற்றும் சபாநாயகர் சோம்நாத் சட்ர்ஜி ஆகியோர் சுமார் 40 ஆண்டுகளாக சபை உறுபினர்களாக உள்ளோம்" என்றார். காங்கிரஸின் மிக மூத்த அனுபவசாலி பிரணாப் முகர்ஜி ஆவார்.
ஜார்ஜ் புஷ்சுடன் விவாதிக்கும் போது..........

சர்வதேச அணுசத்தி முகமை (IAEA) வின் இந்தியாவுக்கான சிறப்பு தள்ளுபடி,அணு எரிபொருள் நாடுகளுடனான ஒப்பந்தம், அமெரிக்க அணு ஒப்பந்தம், 26/11 தாக்குதல்லையடுத்து பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்தது பாகிஸ்தானை பணிய வைத்தது
மற்றும் பல முக்கிய பிரச்சனைகளில் அவரின் பங்களிப்பு முதன்மையானதும் முக்கியமானதுமாகும்.
அமெரிகாவின் வெளியுறவு தலைமை செயலாளர் கண்டலிசா ரைசுடன் அணு ஒப்பந்தம்.

போதுமான கல்வி ,ராஜ தந்திரம் மற்றும் மக்களை புரிந்து செயல்படும் மனோ தத்துவம் ஆகிய குணங்கள் நாடாளுபவர்க்கு தேவை. இவை அணைத்தும் ஒருங்கே அமைந்த அனுபவம்மிக்க பிரணாப் முகர்ஜி பிரதமரானால் நாடு தன் வளர்ச்சி பாதையில் அடுத்த அடி எடுத்து வைக்கும் என்பதில் ஐயம் இல்லை .
4 comments:
from ur blog i know about பிரணாப் முகர்ஜி.....thanks
சற்று முன் உங்களை அழைத்து பதிவை பார்க்க கோரலாம் என்றிருந்தேன் . தங்களாகவே பார்த்துவிட்டு பின்னூட்டம் இட்டதில் பெருமகிழ்ச்சி . நான் அவரை பற்றி எழுதியது சிறிதளவு மட்டுமே.அவரின் உழைப்பு மிக பெரியது . நாட்டுக்கு உழைக்கும் பல நல்லவர்களில் அவரும் ஒருவர். நன்றி ராஜ்குமார் அவர்களே!
ப்ரணாப் தான் எங்கள் ராஜ குரு. அவரின்றி காங்கிரசில் ஒரு அணுவும் அசையாது. இப்போதைக்கு அவரே மிகப் பெரும் ராஜ தந்திரி. பலவேறு அமைச்சரவைக் குழுக்களுக்கு அவர் தான் தலைவர். பிரதமரை விட 2 வயது குறைந்தவர். ஆனால் பெரும் அனுபவசாலி. அவர் இல்லாமல் இருந்தால் காங்கிரஸ் பல பிரச்சனைகளை சமாளித்திருக்காது. என்றும் எங்கள் அன்புக்குரியவர்.
மிக்க நன்றி சிட்டிசன்.
-/சஞ்சய்காந்தி.
பின்னூட்டம் இட்ட சஞ்சய்காந்திக்கு நன்றி
Post a Comment