Tuesday, March 17, 2009

ஓட்டுகள் விலைக்கு ! நாடும் விலைக்கு !

நடைபெறவுள்ள பொது தேர்தலில் ஓட்டுகளை பெற பல இலவச திட்டங்களை பல்வேறு மாநில அரசுகளும், தேசிய கட்சிகளும் அறிவித்துள்ளன. இலவச தொலைகாட்சி பெட்டி,மாத மாதம் ரூபாய் 2000/- ஏழைகளுக்கு(தெலுங்கு தேச கட்சி), இலவச வீட்டு மனை (குஜராத் காங்கிரஸ்), ரூபாய் இரண்டுக்கு கோதுமை(ராஜஸ்தான் காங்கிரஸ்), ரூபாய் 10000/- ல் கணினி மற்றும் இலவச செல் போன்(பா.ஜ.க.) மேலும் பல்வேறு வரி சலுகைகள், சம்பள உயர்வுகள் அறிவிக்கபட்டுள்ளன.இது போன்ற இலவச திட்டங்களை தமிழ் நாட்டிலும் எதிபார்க்கலாம்!தமிழ் நாட்டில் தி.மு.க 2006 அறிவித்த இலவச திட்டங்கள் பெருமளவு வெற்றிக்கு வழிசெய்தது. இதுவே பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ள இலவச திட்டங்களுக்கு முன்னோடி.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஐந்தாண்டுத் திட்டங்களும், பிற செயல் திட்டங்களும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்கான வருவாய் மற்றும் செலவினங்களைக் கணக்கிட்டு மத்திய, மாநில பட்ஜெட்டுக்களும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி சலுகைத் திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் செலவழித்து, பணத்தை வீண் விரயம் செய்கிறது. மத்திய அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு,மாநில அரசுகள் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியிலிருந்து பெருமளவை இலவச திட்டங்களுக்கு எடுத்து, திட்டங்களின் நோக்கத்தையே சிதறடித்து விடுகின்றன. அரசியல் ஆதாயங்களுக்காக இத்தவறை நன்கு அறிந்திருந்தும் மத்திய அரசு, மாநில அரசுகளை எதுவும் கேட்பதில்லை. கண்டும், காணாமல் இருந்து விடுகிறது. இதனால், மக்களின் வாழ்க்கைத் தரமும், வாங்கும் சக்தியும் உயர்வதற்குப் பதிலாக மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு எப்போதும் அரசின் இலவசங்கள் மற்றும் சலுகைகளுக்காக கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சமுதாய நலத் திட்டங்களை அரசியல்வாதிகள் செயல்படுத்துவதன் மூலம் பல கோடிகள் அவர்கள் பாக்கெட்டுக்களுக்குச் செல்கின்றன என்பதை சாதாரணப் பாமரனும் நன்கறிவான். வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தில் 25 சதவீதம் தான் திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகிறதே தவிர மீதிப்பணம் பல முதலைகளுக்குக் கை மாறுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறு திருடும் பணத்தின் ஒரு பகுதி தேர்தலில் செலவு செய்கிறார்கள்.

தமிழ் நாட்டில் நடைபெற்று முடிந்த திருமங்கலம் இடைதேர்தலில் பெருமளவு பணம் விளையாடியது நாடறியும். ஒரு குறிபிட்ட கட்சிகாரர் மட்டும் தன் அப்பா தயவால் சுமார் 100 கோடி செலவு செய்தாராம். இதற்கு பதிலாக அந்த தொகுதியில் உள்ள 100 கிராமங்களுக்கு ரூபாய் ஒரு கோடி வீதம் நல திட்ட பணி செய்தும் வெற்றி பெறலாம் என்பதை ஏனோ சிந்திப்பதில்லை. விருந்துகள், மது மற்றும் பணம், பரிசு கொடுத்தல்ஆகிய வழிகளில் பணம் விரயம் செய்யப்படுகிறது.இந்த பணம் எல்லாம் யாருடையது? ஏது இவ்வளவு பணம்?

அனைத்து இயற்கை வளங்களையும் பெற்றுள்ள இந்தியத் திருநாட்டில் வாழும் இந்தியர்களாகிய நாம் பிழைப்புக்காக மற்ற நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பரிதாப நிலை மாற இந்த இலவச திட்டங்களை எதிர்போம் . ஆக்க பூர்வமான தேர்தல் அறிக்கை கொண்ட கட்சிக்கு வாக்களிப்போம்.

7 comments:

Unknown said...

இந்த பதிவின் தலைப்பு மிக அருமை.அது தான் நிதர்சனமான உண்மையும் கூட!!. ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்கு இவ்வளவு செலவு செய்யப்பட்டிருந்தால், நாடாளுமன்ற தேர்தலுக்கு சொல்லவே வேண்டாம்!!!

citizen said...

பின்னூட்டம் இட்ட நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. ஸ்ரீ என்று மட்டும் இருந்தால் யார் என்று தெரியவில்லை . அவரே அழைத்து பின்னூட்டம் இட்டது தான்தான் என்று கூறியதும்தான் தெரிந்தது நாம்ம ஸ்ரீ என்று! நன்றி!

AjithRaj said...

ungaludaya intha thalaippu superb

AjithRaj said...

ungaludaya intha thalaippu superb

AjithRaj said...

ungaludaya intha thalaippu superb

AjithRaj said...

ungaludaya intha thalaippu superb

citizen said...

பின்னூட்டம் இட்ட நண்பர் அஜீத்ராஜ் அவர்களுக்கும் நன்றி!